வானிலை ஆய்வு மையம் ஃபேஸ்புக்
தமிழ்நாடு

சுட்டெரிக்கும் வெயில்.. இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகரிக்கும் கோடை வெயில் பலவிதமான கோடை கால நோய்களையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் ஒருபுறம் இருக்க... இந்த அச்சம் அதிகரிக்க, மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் வானிலை ஆய்வு மையம், ‘தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியே வெப்பநிலை பதிவாகும். மேலும் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். உள்மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தாலும்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.