தமிழ்நாடு

இலவச பேருந்து பயண பேச்சுக்காக வழக்குப்பதிவு செய்வதா.? - எஸ்.பி.வேலுமணி கண்டனம்

இலவச பேருந்து பயண பேச்சுக்காக வழக்குப்பதிவு செய்வதா.? - எஸ்.பி.வேலுமணி கண்டனம்

webteam

அரசு பேருந்தில் மூதாட்டியின் இலவச பயண பேச்சுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை திரும்பப்பெற வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஜனநாயக ரீதியிலான விமர்சனங்களை தாங்கி கொள்ள முடியாத அரசு, அதிமுக தொண்டர்களை அச்சுறுத்தும் வகையில் வழக்குப்பதிவு செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மேற்கு மண்டல ஐஜி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள எஸ்.பி. வேலுமணி, ஓசி பேருந்து பயணம் என ஏளனம் செய்த அமைச்சரின் பேச்சை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக அரசுப் பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என நடத்துநரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதற்கு மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.