தமிழ்நாடு

திருவண்ணாமலை: முதல்வர் நிவாரண நிதிக்கு ஆட்சியரிடம் ரூ.5000 அளித்த கரும்பு ஜூஸ் வியாபாரி

திருவண்ணாமலை: முதல்வர் நிவாரண நிதிக்கு ஆட்சியரிடம் ரூ.5000 அளித்த கரும்பு ஜூஸ் வியாபாரி

sharpana

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கரும்பு ஜூஸ்  வியாபாரி ஒருவர்  ரூ.5000 ரூபாய் வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்ததையொட்டி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பல தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு ஜூஸ் விற்பனை செய்யும் ரமேஷ்-ரஞ்சனி தம்பதிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களது சேமிப்பு பணம் 5 ஆயிரம் ரூபாய்யை அளித்துள்ளனர். இந்த தம்பதிகளில் செயலை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார் ஆட்சியர்.