தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று விடுதலையாகிறார் சுதாகரன்

சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று விடுதலையாகிறார் சுதாகரன்

Sinekadhara

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருக்கும் சுதாகரன், தண்டனை முடிந்து இன்று விடுதலையாகிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தியபிறகு விடுதலையாகினர். அபராதத்தைக் கட்ட தவறியதால் சுதாகரனுக்கு மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி கூடுதலாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2007ஆம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்காக தான் சிறையில் இருந்ததாகவும், அதனை கணக்கில்கொண்டு தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டுமென சுதாகரன் கோரிக்கை வைத்திருந்தார். அதனடிப்படையில் அவர் இன்று விடுதலையாகிறார். சுதாகரன் செலுத்தவேண்டிய 10 கோடியே பத்தாயிரம் ரூபாய் அபராதத்தில், பத்தாயிரம் ரூபாய் மட்டும் செலுத்தியுள்ளார்.