தமிழ்நாடு

நம்ம என்ன சென்னைலயா இருக்கோம்! - திடீர் குளிரால் நடுங்கும் சென்னைவாசிகள்!

நம்ம என்ன சென்னைலயா இருக்கோம்! - திடீர் குளிரால் நடுங்கும் சென்னைவாசிகள்!

Sinekadhara

சென்னை என்றாலே நம் எல்லோருக்கும் ஞாபகம் வருகிற விஷயங்களில் ஒன்று சூடு. வெயில், மழை, குளிர் என எந்த காலமாக இருந்தாலும் மற்ற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் அவ்வளவு ஜில் காலநிலை இருக்காது. எப்போதுவும் ஒருவித வெப்பம் மற்றும் சூட்டை உணர்வர் சென்னைவாசிகள். அதற்கு மக்கள் தொகை, வாகன நெரிசல் மற்றும் நெருக்கமான கட்டமைப்பு என பலவும் காரணமாக கூறப்பட்டாலும் அட் தி எண்ட் சூடாகத்தான் இருக்கும்.

ஆனால் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் ஒரு ஹேஷ்டேக் சென்னைவாசிகள் மட்டுமல்ல; பிற ஊர்க்காரர்களையும் கூட நம்ம சென்னையா இது? என யோசிக்க வைத்திருக்கிறது. அப்படி என்ன சென்னைக்கு? என்று கேட்கிறீர்களா? ஆம், என்றும் இல்லாத அளவிற்கு இன்று குளிர்ந்து நடுங்குகிறது சென்னை. அட ஜில் க்ளைமேட்டிற்கு பெயர் போன நம்ம பெங்களூருவையே பீட் செய்துவிட்டது என்றால் நம்பமுடிகிறதா?

காலையிலிருந்தே பனி, குளிர் என அனைவரையும் நடுங்க வைத்துவிட்டது சென்னை குளிர். பெங்களூருவில் கூட 26 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கும் நிலையில், இன்று 23 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை மட்டுமே சென்னையில் நிலவுகிறது. காலையில் மட்டுமல்ல; நாள் முழுதும் இதே காலநிலை தொடர்வதால் மதியம் பனி மழை கூட ஓரிரு இடங்களில் பெய்திருக்கிறது.

இதனால் இன்று #ChennaiSnow என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஹேஷ்டேக்கிற்கு கீழ் பலரும் காமெடியான மீம்ஸ்களை பதிவிட்டு குளிரில் நடுங்கும் நெட்டிசன்களை குஷியாக்கி வருகின்றனர். ’’இது சென்னையா? இல்ல ஊட்டியா?’’ என பலரும் எழுப்பும் கேள்வி பிற ஊரில் வசிப்பவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ட்விட்டரில் ட்ரெண்டிங்கிலுள்ள சில டாப் மீம்ஸ்: