சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அக்டோபர் 5 முதல் புறநகர் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் 20 சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புறநகர் ரயில் சேவையை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. முதலில் குறைந்த அளவில் மட்டுமே புறநகர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பணியாளர்கள் என தமிழக அரசு அங்கீகரிப்பவர்கள் மட்டும் புறநகர் ரயிலில் அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.