தமிழ்நாடு

சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் பொதுமக்கள்! - சிசிடிவி வீடியோ!

சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் பொதுமக்கள்! - சிசிடிவி வீடியோ!

webteam

சட்டவிரோத பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் உடலை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. 

குரோம்பேட்டை, நெமிலிசேரி பவானிநகர் ரவி என்பவர் மகள் சுபஸ்ரீ (வயது 22). பி.டெக் படித்துள்ள இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். 

துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவே தடுப்புச் சுவரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சுபஸ்ரீயின் மீது விழுந்துள்ளது. பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி, நிலை தடுமாறி விழுந்த சுபஸ்ரீயின் மீது மோதிவிட்டது. இரண்டு கைகளின் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கி விட்டது. தலையில் பலத்த காயம். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சுபஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அப்போது அந்த வழியே வந்த ஆட்டோ ஒன்றில் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் சுபஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

விபத்து ஏற்பட்டது குறித்த சிசிடிவி வீடியோ ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் தற்போது சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.