தமிழ்நாடு

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

நிவேதா ஜெகராஜா

முல்லை பெரியாறு அணையில் 4 மாத இடைவெளிக்குப் பின் துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு செய்கிறது.

முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்புக்குழுவை அமைத்தது. இதற்கு உதவியாக துணை கண்காணிப்புக்குழுவையும் நியமித்தது. இந்த துணைக்குழு நவம்பர் 2 ஆம் தேதி அணையில் ஆய்வு நடத்தியது.

அதன் பின்னர் நவம்பர் 9 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. டிசம்பர் 22 ஆம் தேதி காணொளி மூலம் ஆய்வும் ஆலோசனையும் நடந்தது. இதையடுத்து, துணை கண்காணிப்பு குழு இன்று அணையில் நேரடியாக ஆய்வு செய்கிறது. அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, வெளியேற்றம் மற்றும் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப் பகுதிகளிலும் ஆய்வு நடைபெறுகிறது.