தமிழ்நாடு

தென்னங்கீற்றில் பிரபலங்களின் உருவங்களை உருவாக்கி அசத்தும் கல்லூரி மாணவர்கள்

தென்னங்கீற்றில் பிரபலங்களின் உருவங்களை உருவாக்கி அசத்தும் கல்லூரி மாணவர்கள்

kaleelrahman

தென்னங்கீற்றில் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அப்துல் கலாம், நடிகர் விவேக் உள்ளிட்டோர் உருவங்களை உருவாக்கி அசத்தும் மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மனிதகுல வரலாற்றின் தொடக்கத்தில் பழங்கால மனிதர்கள் குகை மற்றும் குகைகளை போன்ற அமைப்புடைய பாறைகளில் வாழ்ந்தனர். வேட்டையை முதன்மையாகக் கொண்ட அச்சமூகம் தகவல் தொடர்புக்காகவோ நம்பிக்கை மற்றும் சடங்குகள் சார்ந்தோ தங்கள் வாழ்விடங்களான குகைகள் மற்றும் பாறைகளில் ஓவியங்களை வரைந்து அதன் மூலம் தகவல் பரிமாற்றங்களை கொண்டு வாழ்ந்து வந்தனர்.

அத்தகைய பாறை ஓவியங்கள் தமிழகத்தில் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஓவியங்கள் என்பது நம் வாழ்வின் ஒரு அம்சமாகவே தற்போதும் கருதப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த பிஎஸ்சி வேதியியல் படித்த மாணவர் நேதாஜி மற்றும் முதலாமாண்டு மருத்துவம் படித்து வரும் மாணவர் குகன் ஆகிய இருவரும் விடுமுறை நாட்களை பொழுதுபோக்காக கழிக்காமல் தங்களது திறனை வெளிக்கொணரும் நோக்கில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து தென்னங்கீற்றை பிரபலங்களின் உருவங்களை உருவாக்க முயற்சித்த நிலையில் தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் இருந்தபோதும் தற்போது அவர்கள் முயற்சி முழுவதுமாக வெற்றி பெற்று தென்னங்கீற்றில் தத்ரூபமாக உருவங்களை உருவாக்கி பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளனர். அந்த வகையில் அம்பேத்கர்,; சுபாஷ் சந்திரபோஸ், அப்துல்கலாம் மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் ஆகியோர் உருவங்களை தென்னங்கீற்றில் உருவாக்கி அசத்தியுள்ளனர்.