தமிழ்நாடு

ஆபத்தான பயணம் மேற்கொண்டு பள்ளி செல்லும் மாணவர்கள்

ஆபத்தான பயணம் மேற்கொண்டு பள்ளி செல்லும் மாணவர்கள்

webteam

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு - பசியாவரம் இடையே உள்ள உப்பு நீர் ஏரியைக் கடந்து ஆபத்தான வகையில் மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் அவலநிலை உள்ளது.

பசியாவரம், ரஹ்மத் நகர், சாட்டாங்குப்பம், இடைமணி உள்ளிட்ட 5 கிராமங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படகில் ஆபத்தான வகையில் பயணம் செய்தே கல்வி கற்கும் நிலை இருப்பதாகக் கூறுகின்றனர். படகில் பயணம் செய்யும்போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அனைவரும் படகில் பயணம் செய்து படிக்க முடியவில்லை என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனால் தங்களை உயர்கல்வி படிக்க வைக்க பெற்றோர் அச்சப்படுவதால் பாதியிலேயே படிப்பை நிறுத்தும் நிலை பலருக்கும் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். எனவே இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்துத் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.