தமிழ்நாடு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: விடாமல் தொடரும் மாணவர்களின் போராட்டம்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: விடாமல் தொடரும் மாணவர்களின் போராட்டம்

Rasus

ஸ்டெர்லைட் ஆலையை மூட ‌வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புற‌க்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 50-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்டம் முழுவதும் பரவலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருவதால் நாளுக்கு நாள் போராட்டம் வீரியம் அடைந்து வருகிறது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை மூட ‌வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புற‌க்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4ஆவது நாளாக தொடரும் இந்தப் போராட்டத்தில் கல்லூரி வாயில் முன்பு ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி‌ராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், ஆஸ்‌துமா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்களால் கடுமையாக பாதிக்கப்படுவதாவும், பெண்கள் கருத்தரிப்பதில் கூட பிரச்னை ஏற்படுவதாகவும் தொடர்ச்சியாக அப்பகுதிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.