தமிழ்நாடு

`எப்படியாச்சும் ஸ்கூல் போயிடணும்...’- வயல் வழியே பாதுகாப்பின்றி நடக்கும் குழந்தைகள்!

`எப்படியாச்சும் ஸ்கூல் போயிடணும்...’- வயல் வழியே பாதுகாப்பின்றி நடக்கும் குழந்தைகள்!

webteam

பாதுகாப்பு இல்லாத பாதையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், சாலையின் குறுக்கே பாலம் அமைத்துத் தர வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிவயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் கொள்ளுத்திடல் கிராமத்தைச் சேர்ந்த 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கு சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால், ஈசிஆர் சாலையை கடந்து கிருஷ்ணாசிபட்டினம் வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் வரவேண்டும்.  

இந்நிலையில் குறுக்கு வழியாக இருக்கிற சாலையில்; 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் பள்ளியை அடைந்து விடலாம். வயல்வெளியில் செல்லும் இந்த சாலை வழியாகதான் பல வருடமாக பள்ளி மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் செல்லும் மாணவர்கள் மழைக்காலங்களில் ஆபத்தான் முறையில் சென்று வருகின்றனர்.

இதனால், பள்ளி தலைமையாசிரியர் தற்காலிகமாக பாலம் அமைப்பதற்கு உதவி செய்திருக்கிறார். இதையடுத்து அரசு நிரந்தர பாலமாக அமைத்துத் தர வேண்டும். இல்லையெனில் கொள்ளுத்திடல் கிராமத்திலேயே அரசுப் பள்ளி ஒன்று அமைத்து தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.