தமிழ்நாடு

காவிரி ஆற்றில் வெள்ளத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்

காவிரி ஆற்றில் வெள்ளத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்

rajakannan

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றை கடந்து, வெள்ளத்தில் நடந்து சென்று மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரியாற்றின் மறுகரையில் கர்நாடக எல்லையில் கோபிநத்தம், மாறுகொட்டாய் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மாறுகொட்டாய் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாறு கொட்டாய் கிராம மக்கள் மருத்துவமனை  மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செங்கப்பாடி பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இவர்களுக்கு மிகவும் அருகில், காவிரி ஆற்றைக் கடந்தால் ஒகேனக்கல் அமைந்துள்ளது. 

இங்கு பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வசதியாக உள்ளது. இதனால் மாறு கொட்டாய் கிராமத்தில் உள்ள மக்கள் தினமும் ஒகேனக்கல் வந்து செல்கின்றனர். 

அதேபோல் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒகேனக்கல், ஊட்டமலை, பெண்ணாகரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு செல்ல வீட்டில் இருந்து பரிசல் மூலமாக காவிரி ஆற்றைக் கடந்து ஒகேனக்கல் வருகின்றனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கூட பரிசலில் பயணம் செய்து ஒகேனக்கலுக்கு வந்து செல்கின்றனர். ஆனால் அளவுக்கதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் ஆற்றை கடக்காமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் 3 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கின் போது, மாறுகொட்டாய் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் யாரும் பள்ளிக்குச் 

தொடர்ந்து இன்று காலை காவிரி ஆற்றில் வருகின்ற நீர்வரத்து குறைந்ததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்றனர். ஆனால் தொடர்ந்து பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் போது நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பள்ளி முடிந்து வந்த மாணவ மாணவிகள் வெள்ளப்பெருக்கில் நடந்து செல்வதற்கு அச்சமடைந்தனர்.

இதனையடுத்து அங்கிருந்த பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள் மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக பிரதான அருவிக்கு செல்லும் நடைமேடையில் அழைத்து வந்து தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு விட்டுச் சென்றனர். இதனை அடுத்து தொங்கு பாலத்தில் மீது ஏறும் ஏணி முழுவதுமாக மாணவர்கள் கரையேறிச் சென்றனர். ஏணி மிகவும் பழுது அடைந்து காணப்பட்டதால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.