தமிழ்நாடு

10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாதாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக புகார்

10, 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாதாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானதாக புகார்

kaleelrahman

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு சில பள்ளிகள் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே  வெளியாவதால், ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் சமூக வலைதளங்களில் பள்ளிக்கல்வித் துறையின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.