தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் கைதானதால் பல்கலைக்கழகத்தில் இருந்து வளர்மதி இடைநீக்கம்

குண்டர் சட்டத்தில் கைதானதால் பல்கலைக்கழகத்தில் இருந்து வளர்மதி இடைநீக்கம்

webteam

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதி பல்கலைக்கழகத்தில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தை சேர்ந்த வளர்மதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், கதிராமங்கத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் வெளியேற வேண்டும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் விநியோகித்தார். இதனால் அவரைக் கைது செய்த காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளதால் அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்வதாக பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன் அறிவித்துள்ளார். மேலும், அவர் விடுதலையான பின்னர் பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.