தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது கடும் நடவடிக்கை – மா.சுப்ரமணியன்

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மீது கடும் நடவடிக்கை – மா.சுப்ரமணியன்

kaleelrahman

தனியார் ஆம்புலன்ஸ் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது ... கொரோனா பரவி வரும் தற்போதைய சூழலில் கட்டுபாடு விதிக்க வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு

ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்திற்கு மேல் வரும்போது மத்திய அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகள் அப்பகுதிக்கு விதிக்கப்படும். மேலும் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 40 சதவீதத்திற்கு மேல் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதிகளும் இந்த கட்டுப்பாடுகளுக்குள் அடங்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்புகள் இல்லை. தற்போது ஏற்படக்கூடிய தொற்றினால் 95 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமை படுத்தப்படுகிறார்கள். 5 சதவீதம் பேர் மட்டும்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 61 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக 95.23 சதவீதமும் |இரண்டாவது தவணை 87.25 சதவீதமாகும். 1 கோடியே 6 லட்சம் பேர் இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. இதனால் தமிழக முதல்வரின் ஆலோசனையின் பேரில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 17 லட்சத்து 55 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

எல்லா அரசு மருத்துவமனைகளிலும் அமரர் ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகப்படியாக 1300-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தனியார் ஆம்புலன்ஸ்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.