தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குமரிக்கடல், தெற்கு லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளில் மழைக்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தென்மேற்கு பருவமழையால் குமரிக்கடல், தெற்கு லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடல் பகுகளில் வரும் 30ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் பரவலாக இடியுடன் கூடிய கோடை மழை பெய்து வருவதாகவும் பாலச்சந்தர் தெரிவித்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், வட தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான சாத்தியம் அதிகம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.