தமிழ்நாடு

கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்

கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்

webteam

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக கோவையில் சில பகுதிகளிலுள்ள வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர். 

கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் அதன் கிளைகளான ராஜ வாய்க்கால்களிலும் வெள்ளம் எற்பட்டு இரு கரைகளையும் தொட்டுச்செல்வதால் ஆங்காங்கே சில இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதில் செல்வபுரம் சரோஜினி நகரில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது. ராஜ வாய்க்காலில் வரும் தண்ணீர் மூலம் பாம்பு உள்ளிட்ட விசப் பூச்சிக்கள் வீடுகளுக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ராஜ வாய்க்காலை தூர் எடுத்து ஆழப்படுத்த வேண்டும். உடனடியாக வெள்ளநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.