தமிழ்நாடு

எண்ணூர் டூ தூத்துக்குடி; துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்-முழுவிவரம் உள்ளே

எண்ணூர் டூ தூத்துக்குடி; துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்-முழுவிவரம் உள்ளே

kaleelrahman

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில் காரைக்கால் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 3ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் காரைக்கால் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அதேபோல்,

  • பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
  • எண்ணூர் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
  • நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
  • புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
  • தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தளமான கடற்கரை கோயில் நாளை மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்