தமிழ்நாடு

3 பேருக்கு தொற்று என்றால் ஸ்டிக்கர், 6பேருக்கு பேனர், 10பேருக்கு: சென்னை மாநகராட்சி ஆணையர்

3 பேருக்கு தொற்று என்றால் ஸ்டிக்கர், 6பேருக்கு பேனர், 10பேருக்கு: சென்னை மாநகராட்சி ஆணையர்

webteam

சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவிவரும் நிலையில் 3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாட்டு பகுதி என ஸ்டிக்கரும், 6 பேர் இருந்தால் பேனரும் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “கடந்த முறையை போல வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்டவை இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 3 பேருக்கு தொற்று இருந்தால் அந்தப்பகுதியில் கட்டுப்பாட்டு பகுதி என ஸ்டிக்கரும், 6 பேருக்கு தொற்று இருந்தால் பேனரும் வைக்கப்படும். 10 பேருக்கு மேல் தொற்று இருந்தால் அந்தப்பகுதியில் வருகைப் பதிவேடு உடன் காவல்துறை கண்காணிப்பர்.இதைத்தான் கசப்பான உண்மை என்று ஏற்கனவே கூறினோம், வேறு எதுவும் இல்லை. எல்லோரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். குறுகிய காலத்தில் கொரோனா பாதிப்பு 1000 சதவீதமாக (10 மடங்கு) அதிகரித்துள்ளது.  

சென்னையில் மொத்தமாக 39,500 தெருக்கள் இருக்கின்றன. 600 தெருக்களில் 3 பேருக்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.எங்களைப் பொறுத்தவரை 600 தெருக்களுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்தான்.” என்றார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், அதனைக்கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் நேற்று புதியகட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.