தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: பட்டதாரி பெண் மோட்டர் சைக்கிள் பயணம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: பட்டதாரி பெண் மோட்டர் சைக்கிள் பயணம்

webteam

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் உள்பட 5 பேர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். 

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்த‌ மகேஷ்வரி என்ற பட்டதாரி பெண், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியை நிறுத்தக் கோரியும், போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி கடற்கரைச் சாலையிலிருந்து 5 பேர் கொண்ட குழுவினர் 477 கிலோ மீட்டர் தூரம் வரை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கின்றனர். புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, அருப்புக்கோட்டை வழியாக இன்று மாலை தூத்துக்குடியில் அவர்களது பயணம் முடிவடைவதாகத் தெரிவித்தனர். அங்கு ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகக் கூறினார்.