தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

Rasus

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெற்ற தமிழக அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிக்காக 342 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிர்வாகம் ஒதுக்கியிருந்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம் தீவிரமான காரணமாக ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

இதனையடுத்து சிப்காட் நிர்வாகம் ஒதுக்கிய நிலத்தை அரசு திரும்பப் பெற்றதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை பொதுமேலாளர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிக்கான நிலத்தை திரும்பப் பெற்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.