தமிழ்நாடு

''இஸ்ரோவின் உதவியுடன் மணல் கொள்ளை தடுக்கப்படும்'' - பிரகாஷ் ஜவடேகர்

''இஸ்ரோவின் உதவியுடன் மணல் கொள்ளை தடுக்கப்படும்'' - பிரகாஷ் ஜவடேகர்

webteam

வனப்பகுதியில் உள்ள கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கோவை ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று ஆராய்ச்சி மையத்தில், பறவைகள் சூழல் நச்சுத்தன்மைக்கான நாட்டின் முதலாவது ஆராய்ச்சி கூடத்தை பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார். பின்னர் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடியனார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனக் கூறினார். 

வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் தண்ணீர் மற்றும் தீவனம் அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியிருப்பதாகவும், இதன் மூலம் வன விலங்குகள் ஊருக்கு வருவது தவிர்க்க இயலும் எனத் தெரிவித்தார். இஸ்ரோவின் உதவியால் வனப்பகுதியை கண்காணித்து, மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜவடேகர் தெரிவித்தார்.