தமிழ்நாடு

விழுப்புரம்: பனிச்சுமை காரணமாக அரசுப்பேருந்து ஓட்டுநர் டிப்போவிலேயே தற்கொலை

விழுப்புரம்: பனிச்சுமை காரணமாக அரசுப்பேருந்து ஓட்டுநர் டிப்போவிலேயே தற்கொலை

webteam

பணிச்சுமை காரணமாக அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் புதுச்சேரி கிளையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் ராமராஜ். இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பனிச்சுமை குறித்து கேட்டதற்கு உயரதிகாரிகள் திட்டியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.