தமிழ்நாடு

குழந்தைகளுக்கான மாநில கொள்கைகள் என்னென்ன?

Sinekadhara

தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும் குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. காவலர் குடியிருப்புகள் உள்ளிட்ட புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குழந்தைகள் பாதுகாப்புக்கான மாநில கொள்கையையும் வெளியிட்டார்..

குழந்தைகளுக்கான மாநில கொள்கைகள் என்னென்ன?

  • குழந்தைகளின் பிரச்னைக்கு தீர்வுகாண கிராமம், வட்டம், மாவட்டம், மாநில அளவில் அமைப்புகள் உருவாக்கப்படும்.
  • குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • குழந்தைகளை பாதுகாக்க பிரத்யேகமாக பேரிடர், அவசரநிலை மேலாண்மை அமைப்பு உருவாக்கி செயல்படுத்தப்படும்.
  • 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உறுப்பினராக இருக்கும் வகையில் பஞ்சாயத்துகளில் பாலர் சபை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.