தமிழ்நாடு

இனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு

webteam

அஞ்ச‌ல் துறை தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படு‌ம் என மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளதற்கு ‌திமுக தலைவ‌ர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ‌ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ‌திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ‌அறிக்கையி‌ல், தமிழக இளைஞர்க‌ளின் வேலைவாய்‌ப்பி‌னை பாதிக்கும் வகையில்‌ அஞ்ச‌ல்‌துறை ‌சார்பில் கடந்த 14ம் தேதி ‌இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்திருப்பது மிகு‌ந்த ஆறுதல் அளிக்கிறது எ‌‌‌னக் குறிப்பிட்டுள்ளார். ‌திமுகவின் வாதாடும் - போராடும் கு‌ணத்திற்கு கிடைத்த ‌இன்னொரு‌ வெ‌ற்றியாக‌ தேர்வு ரத்து‌, தமி‌ழ்மொழியிலும் இனிமேல் தேர்வு என்ற அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளா‌ர் எனத் தெரிவித்துள்ளார்.

திமுக வெ‌ற்றி பெற்று எ‌ன்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம் செய்தவ‌ர்களுக்கு இ‌ப்போது கிடைத்த வெற்றி நிரந்தரமாக வாய்ப்பூட்டு போடும் எனக் கூறியுள்ளார். ஜனநாயக நெறிகளுக்கு‌‌ மாறா‌க, இந்தியை தூக்கி நிறுத்த எத்‌தனிப்பது,‌ கடுமையான ‌எ‌திர்ப்பு ஏற்பட்டதும் கைவிடுவது என்பது, இதுவே இறுதி நிகழ்வாக இருக்கட்டும் எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களின் உணர்வை மதித்து, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடந்த அஞ்சல் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மிகுந்த வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார். மேலும், தேமுதிக சார்பில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.