தமிழ்நாடு

ஸ்ரீரங்கம்: வெகு விமர்சையாக நடைபெற்ற நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கம்: வெகு விமர்சையாக நடைபெற்ற நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம்

kaleelrahman

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இரண்டாம் நாள் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு, கொரோனா காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் விழாக்கள் கோயில் உள்பிரகாரங்களில் மட்டும் நடைபெற்றது. 


இந்நிலையில் கடந்த மாதம் பல கட்டுப்பாடுகளுடன் கோயில்களை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கோயில்கள் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று நம்பெருமாள் முத்து வளையம் மற்றும் வைர அபய ஹஸ்தம் அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கொரோனா அச்சத்தால் ஊஞ்சல் மண்டபத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோயிலுக்குள் வரும் பக்த்தர்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்து வருவதோடு உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.