தமிழ்நாடு

 ஸ்ரீபெரும்புதூர்: ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் உயிரிழந்த இளம்பெண்

 ஸ்ரீபெரும்புதூர்: ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் உயிரிழந்த இளம்பெண்

Veeramani

ஸ்ரீபெரும்புதூரில் இன்று நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் அந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் ஹெல்மெட் மிக முக்கிய பங்காற்றி வருகின்றது. இருசக்கர வாகன விபத்தில் பெரும்பாலானோர் உயிரிழப்பதற்கு ஹெல்மெட் அணியாமல் செல்வதே மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர், ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், உயிரைக் காப்பாற்றும் என்று நம்பி அணியும் ஹெல்மெட்கள் சரியான தரத்தில் தயாரிக்கப்படாததால் ஹெல்மெட் அணிந்தும் பலர் உயிரிழக்க நேரிடுகிறது


இந்நிலையில் சென்னை அபிராமபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சாரதா. இவா் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் தங்கி முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தாா். இந்நிலையில், சாரதா தனது இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூா் விஆா்பி சத்திரம் பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் தான் தங்கியுள்ளள அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல நோக்கியா தொழிற்சாலைக்கு எதிரே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சாரதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சாரதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தின்போது சாரதா ஹெல்மெட் அணிந்திருந்தார். விபத்தின்போது சாரதாவின் ஹெல்மெட் கழன்று விழுந்தது, தரம் இல்லாமல் தயாரிக்கப்படும் இதுபோன்ற ஹெல்மெட்டை அணிவதுபோன்ற காரணங்களினாலும் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது என புகார் எழுந்துள்ளது. எனவே போலீசார் தரமான ஹெல்மெட் தான் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.