தமிழ்நாடு

சென்னையில் மழை நிலவரத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்

சென்னையில் மழை நிலவரத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்

Sinekadhara

சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநர் ஸ்வரன்குமார் ஜடாவத், தமிழ்நாடு சாலை பிரிவு இரண்டாம் திட்டத்துறையின் இயக்குநர் கணேசன், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, நில அளவைத் துறையின் இயக்குநர் வினய், பொதுப்பணித் துறையின் இணை செயலாளர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் முதல் 5 மண்டலங்களை கண்காணிக்க உள்ளனர். அதற்கடுத்த 5 மண்டலங்களின் கண்காணிப்பு அதிகாரிகளாக, குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் பிரதீப் குமார், சிறுபான்மையின நலத்துறையின் இயக்குநர் சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் இணை செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு உப்பு உற்பத்தி கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராஜாமணி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் இணை செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அதிகாரி இளம்பகவத், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் நிர்மல் ராஜ், அறிவியல் நகரத் துறையின் துணை தலைவர் மலர்விழி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் சரவணன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் ஆகியோர், மீதமுள்ள 5 மண்டலங்களின் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.