தமிழ்நாடு

26ஆம் தேதி சூரிய கிரகணத்தை காண திருப்பூர் மக்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

26ஆம் தேதி சூரிய கிரகணத்தை காண திருப்பூர் மக்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

webteam

26 ஆம் தேதி வரவுள்ள சூரிய கிரகணத்தை காண திருப்பூரில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்

வருகின்ற 26 ஆம் தேதி காலையில் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ள சூரிய கிரகணமானது திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை காண பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தெரிவித்துள்ள அவர்கள், சுமார் 350 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள சூரிய கிரகணத்தை காணும் வகையில் சுமார் 25 ஆயிரம் பிரத்யேக கண்ணாடிகள் தயார் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சூரிய கிரகணத்தால் யாருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. ஆனால் வெறும் கண்ணால் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டாலும் சரியாக 9 மணியளவில் 3 நிமிடங்கள் வரை முழு சூரிய கிரகணமாக காண முடியும் என தெரிவித்தனர்.