தமிழ்நாடு

தஞ்சை மகாநந்திக்கு 2 டன் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம்

தஞ்சை மகாநந்திக்கு 2 டன் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம்

webteam

மகர சங்கராந்தியை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியக்கோயிலில் இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளை கொண்டு சிவனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. 

தஞ்சை பெருவுடையார் ஆலயம் என்கிற பெரியகோயிலில் மகர சங்கராந்தியை முன்னிட்டு மகாநந்திக்கு சிறப்பு அலங்காரமும் தீபராதனையும் நடைபெற்றது. மகர சங்கராந்தியை முன்னிட்டு 108 பசு மாடுகளுக்கு கோ-பூஜையும் நடந்தது. மேலும் இரண்டு டன் காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றால் நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் கிலோ எடையுள்ள அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், மலர்கள், இனிப்பு வகைகளைக் கொண்டு மகா நந்திக்கு அலங்காரம் செய்யப்பட்டது.  

அலங்கரிக்கப்பட்ட மகா நந்திக்கு சிறப்பு சோடச உபசாரம் என்கின்ற 16 வகையான தீபாராதனையுடன் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பெரியகோயிலில் 108 பசு மாடுகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை, துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது. 

வாழைப்பழங்கள் மற்றும் பொங்கல் உள்ளிட்டவை மாடுகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டன. கோ-பூஜை சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை வழிபட்டனர்.