தமிழ்நாடு

அக். 4 ஆம் தேதி முதல் ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 

அக். 4 ஆம் தேதி முதல் ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 

webteam

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தீபாவளிக்கு சென்னையில் இருந்து 4265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கும். சென்னையில் கூடுதலாக 50 ஏ.சி. பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 825 மின்சாரப் பேருந்துகள் ஓராண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும். 

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கட உள்ளன. சென்னையில் இருந்து 3 நாட்கள் 6, 145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் இருந்து 280 பேருந்துகளும் கோவையில் இருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை முடிந்த பிறகு அக்டோபர் 8 முதல் 9 ஆம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.” எனத் தெரிவித்தார்.