தமிழ்நாடு

தமிழகத்திற்கு ரூ.4,077 கோடி விடுவிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமனிடம் எஸ்.பி வேலுமணி கோரிக்கை

தமிழகத்திற்கு ரூ.4,077 கோடி விடுவிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமனிடம் எஸ்.பி வேலுமணி கோரிக்கை

webteam

தமிழ்நாட்டிற்கான 4 ஆயிரத்து 77 கோடி ரூ‌பாய் மானியத்தை விடுவிக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்துக்கான நான்காயிரத்து 77 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14வது மத்திய நிதி ஆணையத்தின்படி, தமிழகத்துக்கான ஆயிரத்து 196 கோடியே 27 லட்சம் ரூபாய் மானியத்தை விடுவிக்குமாறும் கோரினார். 

அத்துடன் மூவாயிரத்து 780 கோடியே 81 லட்சம் ரூபாய் அடிப்படை மானியத்தையும் விடுவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். மும்பை - பெங்களூரு இண்டஸ்ட்ரியல் காரிடாரை கோவை வரை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிதியமைச்சரிடம் மனு அளித்‌தார். இதேபோல, கோவை - டெல்லி இடையே தினசரி விமான சேவையை ‌ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கோரினார்.