சென்னையில் இயங்கி வரும் சிறப்பு புறநகர் ரயில்களில் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அத்தியாவசியப் பணிகளில் இருக்கும் தனியார் நிறுவன ஊழியர்களும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்கள் கையாளுபவர்கள், சேவை துறையை சேர்ந்தவர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சரக்குகள் மற்றும் பயணிகளை அனுப்பிவைக்கும் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், குழந்தைகள் நல அமைப்பு, முதியோர் இல்லங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த சேவை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பார் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள வழக்கறிஞர்கள் சிறப்பு புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சேவையை பெற தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து புகைப்படம் ஒட்டிய கடிதத்தை பெற வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.