கார் பந்தயம் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”இது நல்லா இருக்கே” - யுவன் சங்கர் ராஜா இசையில் ஃபார்முலா-4 கார் பந்தயத்திற்கான தீம் பாடல் வெளியீடு!

சென்னையில் நடைபெறும் ஃபார்முலா கார் பந்தயம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் இசையில் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.

Prakash J

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெற இருக்கிறது. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது.

இந்த போட்டிகள், இன்று தொடங்கி (ஆக.30) செப்டம்பர் 1 வரை நடைபெற உள்ளது. இதன்மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. இதற்காக 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த கார் பந்தயத்தை பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: உ.பி|7 குழந்தைகள் உட்பட 9பேரை கொன்ற ஓநாய்கள்; தூக்கத்தை இழந்த 30கிராமங்கள்! ‘ஆபரேஷன் பெடியா’ தீவிரம்

இந்த நிலையில் கார் பந்தயம் தொடர்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள தீம் பாடல், இணையத்தில் வைரலாகி வருகிறது. 'லைப் என்ற ரேஸ்ல ஸ்பீடா போகணும் லப்புல' என தொடங்கும் இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார். இதை பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், குமரன் கருப்பையா என்பவர், தன்னுடைய பதிவில், ‘பின்னியெடுத்த யுவன்’ எனப் புகழ்ந்துள்ளார். அதுபோல், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது எக்ஸ் தளப் பக்கங்களில் கார் பந்தயத்தை நடத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் யுவன் அமைத்துள்ள கார் பந்தயம் பற்றிய முழு பாடலையும் யூடியூப் லிங்க்குடன் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க: ஆந்திரா| ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாநிலங்களவை எம்பிக்கள் 2 பேர் ராஜினாமா.. ஜெகனுக்கு மேலும் பின்னடைவு!