தமிழ்நாடு

அசத்துறாங்களே... சுங்கச்சாவடி மீது சோலார் பேனல்!

அசத்துறாங்களே... சுங்கச்சாவடி மீது சோலார் பேனல்!

webteam

அசத்துறாங்களே... சுங்கச்சாவடி மீது சோலார் பேனல்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மேல்கூரைப் பகுதியில் சூரிய சக்தி மூலம் 60 கிலோ வாட் திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன், இந்திய தேசிய நெடுஞ்சாலை மண்டல அலுவலர் திரு.பி.எல்.மீனா ஆகியோர் இன்று துவக்கிவைத்தனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு  இதுகுறித்து பேசிய அம்மாவட்ட ஆட்சித்தலைவர் இல.சுப்பிரமணியன் பேசுகையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மேற்கூரைப் பகுதியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தினந்தோறும் 950 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டதினால் 25 சதவிகிதம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் 7.88 இலட்சம் செலவினம் குறைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.