தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதியை வரவேற்க ப்ளக்ஸ், கொடிக்கம்பங்கள்... - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

அமைச்சர் உதயநிதியை வரவேற்க ப்ளக்ஸ், கொடிக்கம்பங்கள்... - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

webteam

உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி விதிகளை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கொடி கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தஞ்சை மாவட்டத்திற்கு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிகிறார். இதன் காரணமாக தஞ்சை மாநகர மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தஞ்சை மாநகர் முழுவதும் திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது.

மேலும் ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்களும் வரவேற்று வைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மற்றும் நகர முழுவதும் திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளது. பத்தடி உயரத்திற்கு இரும்பு கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ள நிலையில் சாலையில் விபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் விபத்து ஏற்படும் முன்பாக இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்று கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.