தமிழ்நாடு

கிராமத்துக்கு படையெடுத்த பாம்புகள்: மக்கள் அதிர்ச்சி

கிராமத்துக்கு படையெடுத்த பாம்புகள்: மக்கள் அதிர்ச்சி

webteam

கிருஷ்ணகிரி வனச்சுரங்க எல்லையோர கிராம பகுதியில் ஏராளமான பாம்புகள் புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மழைக்காலங்களில் பாம்புகள் இடம்பெயர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிக்கு இடம்பெயர்வது வழக்கம். கிருஷ்ணகிரி வனச்சுரங்க எல்லையோர கிராமங்களான தட்டக்கல், வேப்பனஹள்ளி போன்ற பகுதியில் அடிக்கடி பாம்புகள் இடம்பெயர்வது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த கிராம பகுதியில் நுழைந்த நாகபாம்பு, மலைபாம்பு, கட்டுவிரீயன், கண்ணாடிவிரீயன், கொம்பேறி மூக்கன் என 148 பாம்புகளை வனத்துறையினர் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பாம்புகள் கிராமங்களில் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சப்பட்டனர். இருப்பினும் பாம்புகளால் பொதுமக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.