தமிழ்நாடு

பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் படமெடுத்தாடிய பாம்பு

பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் படமெடுத்தாடிய பாம்பு

Rasus

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராயம்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில் திருக்கல்யாண உற்சவத்தில் நாகப்பாம்பு படமெடுத்தபடி இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அவிநாசியை அடுத்து ராயம்பாளையம் அருகில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை முதல் கோயிலில், சீனிவாச பெருமாள் சன்னதி வாசலில் சுமார் இரண்டு அடி நீளமுள்ள நாகபாம்பு ஒன்று படமெடுத்தபடி இருந்தது. இதைக்கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பரவசமடைந்து பாம்பை வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் பாம்புக்கு பால் ஊற்றினர்.

இதையடுத்து பாம்பின் அருகிலேயே உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அப்போது, பாம்பு தொடர்ந்து படமெடுத்தபடியே உற்சவமூர்த்தி சிலை மீது ஏறி வலம் வந்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அதே இடத்தில் பாம்பு இருந்ததை கண்டு பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து பொதுமக்களே பாம்பை பிடித்து சென்று காட்டுக்குள் விட்டனர்.