தமிழ்நாடு

பாம்புகள் பாட்டில் தண்ணீரை குடித்து பார்த்திருக்கிறீர்களா? - கடலூர் விலங்கு ஆர்வலரின் சேவை

பாம்புகள் பாட்டில் தண்ணீரை குடித்து பார்த்திருக்கிறீர்களா? - கடலூர் விலங்கு ஆர்வலரின் சேவை

Sinekadhara

பாம்புகள் பாட்டில் தண்ணீரைக் குடித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு காட்சியை கடலூரில் பார்க்கலாம். இங்கு உயிரின ஆர்வலர் செல்வா என்பவர், பாம்புகளை மீட்டு வனப்பகுதிக்குள் விடும் சேவையை செய்துவருகிறார். கோடை வெயில் அதிகரிப்பால், மண்ணில் வெப்பம் தாங்காமல் பாம்புகள் குடியிருப்புப்பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இவ்வாறு கடந்த ஒருவாரத்தில் மட்டும் குடியிருப்புகளில் புகுந்த ஐம்பத்துக்கும் அதிகமான பாம்புகளை செல்வா மீட்டுள்ளார்.

பெரும்பாலான பாம்புகள் வீடுகளுக்குள் வந்து மயங்கிய நிலையில் காணப்படுவதாக கூறும் செல்வா, அவற்றுக்கு பாட்டிலில் குடிநீர் கொடுக்கிறார். தாகத்தால் தவித்திருக்கும் பாம்பும் பாட்டில் தண்ணீரை குடிக்கிறது. வெப்பம் தாங்காமல் வலைகளில் இருந்து பாம்புகள் வெளியேறும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் இந்த வன உயிரின ஆர்வலர்.