Govt Bus pt desk
தமிழ்நாடு

தேனி: அரசு பேருந்தில் திடீரென கிளம்பிய புகை - அலறியடித்து கீழே இறங்கி ஓடிய பயணிகள்

ஆண்டிப்பட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கு சென்ற அரசு நகர பேருந்தில் இருந்து திடீரென்று புகை கிளம்பியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர்.

webteam

செய்தியாளர் - மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சித்தார்பட்டிக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆரோக்கியா அகம் அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்தின் உள்பகுதியில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதைப் பார்த்த பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள், அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

Govt bus

புகை கிளம்பியதை பார்த்து அச்சமடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் வந்து பார்த்த போது, டியூப் லைட்டிற்குச் செல்லும் மின் வயர்களில் உரசி புகை கிளம்பியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து டியூப் லைட் சுவிட்சை ஆப் செய்துவிட்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கிளம்பிய புகை அடங்கியது.

இதையடுத்து பேருந்தில் வந்த பயணிகள் வேறு பேருந்து, மற்றும் ஆட்டோக்களில் ஏறி சொந்த ஊருக்குச் சென்ற நிலையில் சாலையோரத்திலேயே பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும் நடத்துனரும் கிளம்பிச் சென்றனர். இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.