தமிழ்நாடு

திடீரென தீப்பற்றி எரிந்த கோரைப்புற்கள்.. புகை மூட்டத்தால் சூழ்ந்த திருவாரூர் நகரம்

திடீரென தீப்பற்றி எரிந்த கோரைப்புற்கள்.. புகை மூட்டத்தால் சூழ்ந்த திருவாரூர் நகரம்

JustinDurai

திருவாரூர் ரயில் நிலையம் அருகே வயல்களில் உள்ள கோரைகள், வெட்டிப் போடப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் தீபிடித்து எரிந்ததால் நகர்புறம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

திருவாரூர் ரயில் நிலையம் அருகே உள்ள வயல்களில் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி செய்யாததால், அதில் கோரை புற்கள் வளர்ந்திருந்தன. இந்நிலையில், அந்த கோரை புற்கள் மற்றும் வெட்டி போடப்பட்ட சீமை கருவேல மரங்கள்  திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காற்று அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவியது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டம் நகர் முழுவதும் சூழ்ந்தது.

குறிப்பாக ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், குரு நகர்  பகுதிகளில் அதிக மூட்டத்தால், சாலைகள், வீடுகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக புகை மூட்டம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரியவிட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுமக்களும் சாலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக புகை மூட்டம் நகர் முழுவதும் பரவி வருகிறது. தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத இடம் என்பதால் சிறிய வாகனம் மூலம் தீயை அணைக்க வீரர்கள் முயன்று வருகின்றனர். தீ எரியும் பகுதியின் அருகே ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாய் கிணறு மற்றும் எரிந்து கொண்டிருக்கும் வயலில் அடியில்  எண்ணெய் குழாயும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.