தமிழ்நாடு

ரயில் சேவையை தாமதமாக்கிய புகையும், பனியும்

ரயில் சேவையை தாமதமாக்கிய புகையும், பனியும்

webteam

கடும்பனி மற்றும் புகைமூட்டம் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் ரயில் சேவை தாமதமாகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாள் பழையன கழித்து, புதியன புகுதலாக கருதப்படுகிறது. அதாவது பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் அதிகாலையிலேயே வீதிகளில் குவிந்த சிறுவர்கள் பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தினர். மேலும் பல்வேறு பகுதிகளில் பொருட்கள் எரிக்கப்பட்டதால் சென்னையை கடுமையான புகைமூட்டம் சூழ்ந்தது. பழைய பொருட்களை எரிப்பதால் பனியுடன் சேர்ந்து சென்னை புகைமண்டலமாக  காட்சியளிக்கிறது.

இதன்காரணமாக சென்னை புறநகர் பகுதியில்  ரயில் சேவை தாமதமாகிறது. அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டம் காணப்படுவதால் சென்னை, அரக்கோணம் மார்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் அரைமணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றன.