சென்னையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த சிறுவனை பத்திரிகையாளர் ஒருவர் காப்பாற்றினார்.
சென்னை, வேப்பேரியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் குடியிருப்பில் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்பகுதி மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைப் பூசி ஆர்வத்துடன் ஹோலிப் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டு அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் சிறுவனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் சிறுவனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் அந்தச் சிறுவன் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது அப்பகுதியில் போதிய பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.