தமிழ்நாடு

பாலியல் வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு

பாலியல் வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு

kaleelrahman

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 'சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி'யின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவர் மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர் பிறகு அந்த வழக்கில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கில் சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யபட்ட இரண்டு ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தால தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது இந்நிலையில் மேலும் ஓரு வழக்கில் சிவசங்கர் பாபா உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்தார்.

ஆனால், ஜாமீன் வழங்கினால் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புகார் தாரர்களுக்கும் ஆபத்து நேரிடும் எனவும், மேலும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்கக் கூடாது என தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையேற்று தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் கோரியும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார் இந்நிலையில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நாகேஸ்வராவ் அமர்வில் வரும் 8ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது