தமிழ்நாடு

சிவகங்கை: 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக கிராமத்திற்கு வந்த அரசு பேருந்து

சிவகங்கை: 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக கிராமத்திற்கு வந்த அரசு பேருந்து

kaleelrahman

மானாமதுரை அருகே சுதந்திரத்திற்கு பின் முதன் முதலாக குவளைவேலி கிராமத்திற்கு பேருந்து போக்குவரத்தை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குவளைவேலி கிராமத்திற்கு சுதந்திரத்திற்கு பின் முதன் முதலாக அரசு பேரூந்து இயக்கப்பட்டதால் சிறுவர் சிறுமியர்கள் ஆராவாரத்துடன் கையசைத்து வரவேற்றனர்,

மானாமதுரை அருகே குவளைவேலி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள், வெளியூர் செல்ல 6 கி.மீ தூரம் உள்ள முத்தனேந்தல் சென்றுதான் பஸ் ஏற வேண்டும். இதையடுத்து அரசு பேருந்தை இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் தற்போது குவளைவேலியில் இருந்து நாள் தோறும் தலா 3 முறை இரண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

குவளைவேலியில் இருந்து மானாமதுரை மற்றும் பழையனூர் ஆகிய இரு கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்தை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி தொடங்கி வைத்தார். புதிதாக வந்த அரசு பேரூந்துகளை கண்ட சிறுவர், சிறுமியர்கள் ஆராவாரத்துடன் கையசைத்து வரவேற்றனர்.