சிவகங்கையை அடுத்த மானாமதுரையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக
சிவகங்கை மாவட்டம் நெடுங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மணல் எடுத்துச்செல்லப்படுகிறது. இவ்வாறு மணல்
எடுக்கப்படுவதால், தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அத்துடன் மழைக்காலத்தில் நீரை,
நிலத்தில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் கண்மாயில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளும் நிறுவனத்தின் மீது, வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க
வேண்டும் என 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக மானாமதுரை தாலுகா அலுவலகத்தை
முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களை போலீஸார் கைது செய்தனர்.