மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு pt desk
தமிழ்நாடு

சிவகங்கை| காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் விபரீத முடிவு

மதகுபட்டியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியைச் சேர்ந்தவர் மோனிஷா (24). இவர், சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவரை சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மோனிஷாவை திருமணம் செய்து கொடுக்குமாறு மோனிஷாவின்ட பெற்றோரை ஆகாஷ் வற்புறுத்தியுள்ளார், ஆனால், மோனிஷாவின் பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.

கல்லூரி மாணவி கொலை

இந்நிலையில், இன்று மதகுபட்டிக்கு வந்த ஆகாஷ், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மோனிஷாவை நேரில் சந்தித்து தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். மோனிஷா மறுக்கவே அருகில் இருந்த அருவாளை எடுத்து மோனிஷாவை வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மோனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதயடுத்து அருகில் இருந்த பாட்டிலை உடைத்து ஆகாஷூம் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு வந்த மதகுபட்டி காவல் நிலைய போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.