வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் 62 சதவிகிதமும், புதுச்சேரியில் 79 சதவிகிதமும் குறைவாகப் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 1 முதல் டிசம்பர் 28- ஆம் தேதி வரை பதிவான மழை அளவின் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை பொய்த்துப் போனதில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் 81 சதவிகித பற்றாக்குறையுடன் முதலிடத்தில் உள்ளது. நாமக்கல்லில் 80 சதவிகிதமும், கரூரில் 78 சதவிகிதமும் மழை குறைவாகப் பெய்துள்ளது. அரியலூரில் 77 சதவிகிதமும், ஈரோடில் 76 சதவிகிதமும் மழை பற்றாக்குறையாகப் பெய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை 47 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது.