தமிழ்நாடு

தீப்பிடித்து எரியும் அரிசியால் அதிர்ச்சி!

தீப்பிடித்து எரியும் அரிசியால் அதிர்ச்சி!

webteam

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மருத்துவர் ஒருவர்‌ வாங்கிய அரிசி பிளாஸ்டிக் தன்மையுடன் இருந்ததாக புகார் கூறியுள்ளார்.

அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்ற மருத்துவர் அண்மையில் நாகர்கோவில் பத்து கிலோ அரிசி வாங்கியுள்ளார். இந்த அரிசியை சமைத்தபோது செரிமானக்கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை சோதித்து பார்த்தபோது அரிசி உருண்டை பந்து போல குதித்து ஓடியது. அரிசியை வாணலியில் வறுத்தபோது தீப்பிடித்து எரிந்தது. இதனால் பிளாஸ்டிக் தன்மை கொண்ட அரிசி என்ற சந்தேகத்தின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இவர் தகவல் அளித்தார். இதையடுத்து நேரில் வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அரிசியை சோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிளாஸ்டிக் அரிசி வதந்தி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தப்புகாரால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.